Sunday, May 17, 2009

அன்னை பூபதி கட்டடத்தை வெடிக்கவைத்து பிரபாகரன் மற்றும் தளபதிகள் தற்கொலை


விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் எந்தத் தடயமும் தமக்கு இதுவரையில் கிடைக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக வெளியான வதந்திகள் எவையும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அது கூறியுள்ளது.

மோதல்களில் கொல்லப்பட்ட இரண்டு விடுதலைப் புலிகள் இயக்க இடைநிலை தலைவர்களின் உடல்களே தமக்குக் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தமது நடவடிக்கைகளின்போது பிரபாகரன் உயிருடனோ அன்றி இறந்த உடலாகவோ கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஏ.எஃப்.பி. செய்திச் சேவைக்கு இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹனுகல்ல தெரிவித்துள்ளார். பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக பரவியிருக்கும் வதந்திகளை இதன்போது அவர் மறுத்துள்ளார்.

"பிரபாகரன் தொடர்பான எந்தத் தகவலும் எம்மிடம் இல்லை'' என்று லக்ஸ்மன் ஹனுகல்ல ஏ.எஃப்.பி.யிடம் தெரிவித்தார்.

தற்கொலை?

வன்னியில் விடுதலைப் புலிகள் வசம் எஞ்சியிருந்த நிலப்பரப்பை இராணுவம் வேகமாகக் கைப்பற்றிவரும் நிலையில், பிரபாகரன் மூத்த தளபதிகளுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்டுவிட்டார் என்ற வதந்திகள் பரவியுள்ளன.புலிகளின் தலைவர்வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் தளபதிகள் பொட்டு அம்மான் உள்ளிட்டோர் இன்று பிற்பகல் 6.45 மணியளவில் 'அன்னை பூபதி" என்ற பெயரிடப்பட்ட கட்டடத்துகள் போயிருந்தவாறு அதனை வெடிக்கவைத்து தற்கொலைசெய்யது கொண்டுள்ளனர்.

வன்னியில் தமது முகாம்களில் ஒன்றில் இருந்தவாறு அதனை குண்டுவைத்து தகர்த்து புலிகளின் தலைவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை அரசியல், இராணுவ விமர்சகர் ஒருவர் நேற்றுத் தகவல் வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற வதந்திகள் வேகமாகப் பரவியுள்ளது.

எனினும், இந்த ஊகங்கள் எதனையும் களத்தில் மோதல்களில் ஈடுபட்டுவரும் படைத்தரப்பினரோ, பாதுகாப்பு அமைச்சோ இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை. விடுதலைப் புலிகள் ஒரு சதுர கிலோ மீற்றருக்கும் குறைவான நிலப்பரப்புக்குள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலை மட்டுமே பாதுகாப்பு அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.

ஆயுதங்களைக் கைவிடத் தயார்?

இதேவேளை, படைத்தரப்பின் முற்றுகை கடுமையாக இறுகியுள்ள நிலையில், மோதல்களில் சிக்குண்டுள்ள பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக தமது ஆயுதங்களை மௌனமாக்கத் தயார் என்று விடுதலைப் புலிகள் புதிய அறிவிப்பு ஒன்றை இன்று விடுத்துள்ளனர். புலிகள் ஆயுதங்களைக் கைவிடத் தயார் என்று அறிவித்திருப்பதாக அனைத்துலக ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்டு வருகின்றன.

"மோதல்கள் ஒரு கசப்பான முடிவுக்கு வருகின்றன'' என்று, விடுதலைப் புலிகளின் சர்வதேச தொடர்பாளர் செ.பத்மநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் புலிகள், சுமார் மூன்று தசாப்தகாலமாக தாம் முன்னெடுத்துவந்த ஆயுதப் போராட்டத்தைக் கைவிடத் தயாராகிவிட்டமை தெளிவாவதாக இந்திய ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான நாராயணசுவாமி அல் ஜசீரா தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment