Wednesday, May 27, 2009

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வெற்றிபெறும்: சமரசிங்க நம்பிக்கை


ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வெற்றிபெறும்: சமரசிங்க நம்பிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாகக் கூட்டப்பட்டிருக்கும் விசேட அமர்வில் இலங்கைக்குப் போதியளவு ஆதரவு இருப்பதாகவும், இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பிழையானவை என்பது நிரூபிக்கப்பட்டுவருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
“எம்மீது விசாரணை நடத்தப்படவேண்டிய தேவை இல்லை. பல்வேறு தரப்பினரால் அரசியல் அறிக்கைகள் பல வெளியிடப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு நாம் உணர்ச்சிவசப்படத் தேவையில்லையென நான் கருதுகிறேன்” என அமைச்சர் ஜெனீவாவிலிருந்து ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்திருக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவர் நவநீதம்பிள்ளை கூறியிருந்தார்.
எனினும், இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் தேவையென மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் கூறவில்லையென அமைச்சர் சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
“எமக்கு எதிராகப் போர் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு வீசா வழங்கவில்லையென்ற கேள்விகள் எதுவும் எழாது. ஏனெனில், உள்ளூர் விவகாரங்களை அரசாங்கம் சட்டரீதியாகக் கையாழும்” என்றார் அமைச்சர்.

மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருப்பதுடன், அதற்குப் பதிலளிக்கும் வகையில் இலங்கை அரசாங்கமும் பதிலறிக்கையொன்றை முன்வைத்துள்ளது.
இலங்கைக்கு எதிரான அறிக்கைக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் உறுப்பு நாடுகள் மத்தியில் மாற்றுக் கருத்துக்கள் காணப்படுவதாகத் தெரியவருகிறது. சீனா, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, மலேசியா, பஹ்ரெய்ன், பிலிப்பைன்ஸ், கியூபா, சவுதி அரேபியா, எகிப்து, நிக்கரகோவா, பொலிவியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதுடன், இலங்கைக்கு முன்னர் ஆதரவு வழங்கிய ஈராக் தனது நிலைப்பாட்டை மாற்றியதுடன், இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தது.

ஏ-9 வீதியைத் திறக்க இராணுவத்தின் அனுமதி இல்லை: அமைச்சர்

யாழ்ப்பாணத்துக்கும் கண்டிக்கும் இடையிலான ஏ-9 வீதியைத் திறப்பதற்கு இராணுவத்தினரிடமிருந்து இன்னமும் அனுமதி கிடைக்கவில்லையென பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் டபிள்யூ.பீ.எக்கநாயக்க கூறினார்.

ஏ-9 வீதியின் புனரமைப்பு நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளபோதும் அதனைத் திறப்பதற்கான திகதி தொடர்பில் இராணுவத்தரப்பில் எந்தவிதமான இணக்கப்பாடும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லையென அவர் குறிப்பிட்டார்.எனினும், யாழ் குடாநாட்டுக்கான பொருள்களை ஏற்றிச்செல்லும் லொறிகள் ஏ-9 வீதியூடாகச் செல்ல அனுமதிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அமைச்சர் தெரிவித்தார்.“இவ்வாறு அனுப்பப்படும் லொறிகள் அநுராதபுரத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அடைக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணத்தில் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படும்” என எக்கநாயக்க கூறினார்.அதேநேரம் 86 கிலோ மீற்றர் நீளம்கொண்ட ஏ-32 வீதியின் 12 கிலோ மீற்றர் தூரம் புனரமைக்கப்பட்டுவிட்டதாகத் தமக்கு அறிக்கை சமர்;ப்பிக்கப்பட்டிருப்பதாகவும், அந்தப் பாதையைத் திறப்பதாயின் முழுமையான அறிக்கை கிடைக்கப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tuesday, May 26, 2009

பிரபாகரன் கொலைக்கு பத்மநாதனே காரணம்: கருணா அம்மான்


விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் கே.பி. என அழைக்கப்படும் பத்மநாதன் சதி செய்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைக் கொலைசெய்திருப்பதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைக் காப்பாற்றுவதாக இறுதிவரை உறுதிமொழி வழங்கிய கே.பி. இறுதி நேரத்தில் அந்த உறுதிமொழியைக் காப்பாற்றவில்லையென அமைச்சர் கூறினார்.

“வேண்டுமென்றே கே.பி. அவ்வாறு செய்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் நிதிப் பிரிவின் கட்டுப்பாடு கே.பி.யின் கீழேயே இருந்தது. இறுதி மோதலில் பிரபாகரன் கொல்லப்படவேண்டுமென விரும்பிய கே.பி., அவ்வாறு பிரபாகரன் கொல்லப்பட்டாலே தான் அடுத்த தலைவராகமுடியும் நினைத்திருந்தார்.” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாடுகளில் கே.பி. முன்னெடுத்த பிரசாரங்களாலேயே புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களிடமிருந்து பெருமளவு நிதி புலிகள் அமைப்புக்கு வழங்கப்பட்டதாக கருணா அம்மான் குற்றஞ்சாட்டினார்.

“விடுதலைப் புலிகள் அமைப்புக்குப் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் எந்த உதவியும் செய்யக்கூடாதென நான் வேண்டுகோள்விடுக்கிறேன். அந்த அமைப்பு தற்பொழுது இல்லை. தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகத் தம்மை இணைத்துக்கொள்ளவேண்டும்” என்றார் அவர்.

அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளும் குமரன் பத்மநாதனும் இணைந்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைக் காப்பாற்றுவதாகக் கூறி சதிசெய்து அவரைக் கொலைசெய்திருப்பதாகத் தமிழ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

கிழக்கிலுள்ள புலிகள் சரணடைய நடவடிக்கை

இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் காட்டுப் பகுதிகளில் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகள் அரசாங்கத்திடம் சரணடைவதற்குத் தனது உதவியை நாடியிருப்பதாகவும் அமைச்சர் முரளீதரன் கூறியுள்ளார்.

கிழக்கில் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தன்னைத் தொடர்புகொண்டு அரசாங்கப் படைகளிடம் சரணடைவதற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

“அனைத்துத் தலைவர்களும் சரணடையவுள்ளனர். ராம் என அறியப்பட்டவரைத் தவிர ஏனையவர்கள் சரணடையத் தயாரெனக் கூறி கடந்த ஒரு வாரமாக என்னைத் தொடர்புகொண்டுவருகின்றனர். இந்த விடயத்தை நான் பாதுகாப்பு அமைச்சுக்குத் தெரியப்படுத்தினேன். அவர்கள் உடனடியாகச் சரணடைந்தால் அவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்க நாம் தயார்” எனக் கருணா அம்மான் கூறினார்.

Sunday, May 24, 2009

வன்னியில் நடந்தது என்ன?: நடந்தவற்றை விபரிக்கும் மக்கள்



இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கப் படைகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு வலயத்தில் தாம் எதிர்கொண்ட துன்பங்களை மக்கள் தற்பொழுது வெளியிட ஆரம்பித்துள்ளனர். இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலுள்ள மக்கள் மூலம் கிடைத்த தகவல்களை கார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு வலயத்திலிருந்து இடம்பெயரும்போது விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூடுகள் மற்றும் பாதுகாப்பு வலயப் பகுதி மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்கள், மருத்துவமனைகள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் போன்ற தாம் அனுபவித்த துன்பங்களை நலன்புரி நிலையங்களிலுள்ள மக்கள் சிலர் விபரித்ததாக கார்டியன் குறிப்பிட்டுள்ளது.
இறுதி மூன்று மாதமாக வன்னிப் பரப்பில் நடந்த யுத்தத்தினால் 2,000 சிறுவர்கள் உள்ளடங்கலாக 15,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாக சுகாதார அதிகாரியான சிவா என்பவர் தெரிவித்துள்ளார். தான், தனது மனைவி, ஒரு வயது மற்றும் மூன்று வயதுப் பிள்ளைகள் அனைவரும் ஆட்லறித் தாக்குதல்களிலிருந்து தப்புவதற்காக கடந்த ஒன்பது மாதங்களில் 13 தடவைகள் இடம்பெயர்ந்ததாக அவர் கூறினார்.
புதுமாத்தளன் பகுதியில் கடந்த மூன்று மாதங்கள் தாம் பதுங்கு குழிகளுக்குள்ளேயே வாழ்க்கை நடத்தியதாகக் குறிப்பிட்ட அவர், இந்தப் பதுங்கு குழிகள் ஒவ்வொன்றும் 15 முதல் 20 பேர் பதுங்கியிருக்க கூடியவை எனக் குறிப்பிட்டார். மீண்டும் அவர்கள் இடம்பெயரவேண்டி ஏற்பட்டதால் சில நாட்கள் மாத்திரமே பதுங்கு குழிகளுக்குள்ளும் இருக்க முடிந்ததாக அவர் கூறினார்.
பெப்ரவரி மாதம் சுகவீனமுற்ற மக்களை கடல் வழியாக சிகிச்சைக்காக அனுப்பிவைத்ததாகவும், அதன் பின்னர் அவரைத் தான் காணவில்லையெனவும் சிவா கூறியுள்ளார்.
புதுமாத்தளன் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இயங்கிவந்த தற்காலிக வைத்தியசாலை மீது பல்குழல் பீரங்கி, பொஸ்பரஷ் குண்டுகள், ரொக்கட் குண்டுகள் மூலம் மூன்று தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த சுகாதார அதிகாரி விபரித்தார்.
“இரசாயனக் குண்டுகளால் பாதிக்கப்பட்ட சிலரை நான் கண்டேன். அவர்களின் தோல்கள் எரிந்துவிட்டன. அவை பொஸ்பரஸ் குண்டுகள் என்பது உறுதி” என்றார் அவர்.
விடுதலைப் புலிகளே பொஸ்பரஸ் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதாக இலங்கை இராணுவம் புகைப்படங்களுடன் செய்திகளை வெளியிட்டிருந்தது. எனினும், விடுதலைப் புலிகள் தரப்பு இதனை மறுத்திருந்தது. ஊடகவியலாளர்கள் இங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால் தகவல்களை சுயாதீனமாக உறுதிப்படுத்தமுடியவில்லை. இருதரப்புக்களுமே இவ்வாறான சம்பவங்கள் குறித்து ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டியுள்ளன.
யுத்தம் முடிவடைந்துவிட்டதாகவும், பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ள நிலையில் முகாம்களிலுள்ள மக்கள் இந்தத் தகவல்களை வெளிப்படுத்தியதாக கார்டியன் குறிப்பிடுகிறது. கார்டியனுக்குத் தெரிந்த மூன்றாம் தரப்பு ஒன்றின் மூலமாக இந்தத் தகவல்கள் பெறப்பட்டதாகவும், பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பெயர்கள் மாற்றப்பட்டிருப்பதாகவும் அது குறிப்பிடுகிறது.
ஒழுங்கான வைத்தியசாலை இல்லை
காயப்பட்டவர்களுக்கும், நோயுற்றவர்களுக்கும் சிகிச்சையளிப்பதற்கு புதுமாத்தளன் பகுதியில் ஒழுங்கான வைத்தியசாலையொன்று இருக்கவில்லையென சுகாதார அதிகாரியான சிவா என்பவர் கூறினார்.
“ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் கடுமையான மழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெரும்பாலான நோயாளர்கள் நிலங்களிலேயே படுத்திருந்தனர். உடனடியாக எழும்புவதற்கு அவர்களிடம் திராணி இருக்கவில்லை. அன்றிரவு நீரில்மூழ்கி 10 பேர் உயிரிழந்தனர்” என்றார் அவர்.
இராணுவத்தினர் முன்னேறி வரும் நிலையில், தமது கட்டுப்பாட்டிலுள்ள பதுங்கு குழிகளுக்குச் செல்லுமாறு எவ்வாறு விடுதலைப் புலிகள் பொதுமக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்பதையும் சிவா விபரித்தார்.
“ஏப்ரல் 24ஆம் திகதி இராணுவத்தினர் பாதுகாப்பு வலயத்தை உடைத்துக்கொண்டு உள்நுழைந்துவிட்டார்கள். அவர்கள் பதுங்கு குழிகளின் விழிம்புகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திக்கொண்டு, யார் உள்ளே இருக்கிறார்கள் என அதற்குள்ளிருந்த எம்மிடம் கேட்டனர். பொதுமக்களே உள்ளோம் என்று நாம் கத்தினோம். பின்னர் அவர்கள் எமக்கு வழித்துணை வழங்கி அழைத்துச் சென்றனர்” என்றார் சிவா.
இராணுவத்தினரால் தாம் அழைத்துச்செல்லப்பட்டபோது விடுதலைப் புலிகள் தம்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகத் தமக்கு ஏற்பட்ட அச்சம் மிகுந்த அனுபவத்தை அவர் விபரித்தார்.
இரணைப்பாலைக்குளம் பகுதியிலேயே இராணுவத்தினரின் முதலாவது சோதனைச் சாவடி இருந்ததாகவும், அங்கு தமது ஆடைகள் அனைத்தையும் களையுமாறு கோரி சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பின்னர், தாம் அங்கிருந்து ஓமந்தைச் சோதனைச் சாவடிக்கு அழைத்துவரப்பட்டதுடன், விடுதலைப் புலிகள் என அடையாளம் காணப்பட்டவர்கள் வேறாக்கப்பட்டதாகவும் கூறினார்.
இராணுவத்தினர் தம்மை மரியாதையுடனும், கௌரவமாகவும் நடத்தியதாகக் கூறும் சிவா, தமக்கு உணவு மற்றும் நீர் போன்றவற்றை வழங்கியதாகத் தெரிவித்தார். “இதனை நாம் எதிர்பார்க்கவில்லை” என்றார் அவர்.
இதேவேளை, ஐந்து பிள்ளைகள் மற்றும் நான்கு பேரப்பிள்ளைகளுடன் நெஞ்சளவு நீருள்ள பகுதியைக் கடந்து, ஏப்ரல் 25ஆம் திகதி வவுனியா மெனிக் பார்ம் முகாமுக்கு வந்ததாக 58 வயது யுவதியொருவர் கூறினார்.
“அது மிகவும் பயங்கரமானது என்பதுடன் மிகவும் கடினமானது. ஆனாலும், எனது பேரப்பிள்ளைகளுக்காக நான் அதனைச் செய்தேன். அவர்கள் பாதுகாக்கப்படவேண்டும் என நான் விரும்பினேன்” என்றார் அவர்.
“எனது ஐந்து பிள்ளைகளையும், நான்கு பேரப்பிள்ளைகளையுமே என்னால் காப்பாற்ற முடிந்தது. ஏனைய மூன்று பிள்ளைகளுக்கும் மேலும் மூன்று பேரப்பிள்ளைகளுக்கும் என்ன நடந்தது என எனக்குத் தெரியாது. ஷெல் தாக்குதல்களின் போது நாங்கள் பிரிந்துவிட்டோம். எப்போது நான் அவர்களைச் சந்திப்பேனோ தெரியாது” என அந்த யுவதி கண்ணீருடன் கூறினார்.
நலன்புரி நிலையங்களின் நிலைமை
இடம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாம்களின் நிலைமை தொடர்பாக விளக்கிய கோதை என்பவர், பணம் உள்ளவர்கள் மாத்திரமே நீரைப் பெற்றுக்கொள்ளமுடிவதாகக் கூறினார். தனது ஒரு பிள்ளை தற்காலிக கூடாரத்துக்கு வெளியே தரை விரிப்பொன்றின் மீது தூங்கிக்கொண்டிருப்பதாகவும், தனது பிள்ளை கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சல் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
முகாம்களில் காணப்படும் சுகாதாரமற்ற சூழ்நிலையாலேயே தனது பிள்ளைக்கு நோய் ஏற்பட்டதாக அந்தத் தாய் கவலையுடன் தெரிவித்தார்.
“நிலைமை மிகவும் இக்கட்டாகவே உள்ளது. எனது பிள்ளைகள் உணவு மற்றும் தண்ணீரும் தருமாறு கெஞ்சுகிறார்கள். அதனைப் பார்க்கும்போது மரணவேதனை ஏற்படுகிறது. நாம் வித்தியாசமான வாழ்க்கை வாழ்ந்தவர்கள். எமக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை” என அந்தத் தாய் கவலையுடன் கேள்வியெழுப்பினார்.

நன்றி inlanka

Wednesday, May 20, 2009

சுசையின் உடல் நந்திக்கடலில் கண்டுபிடிப்பு







சூசை மற்றும் வெற்றி றாம்குமார் மணிமேகலா அண்ணாத்துரை ரங்கன் வினோதன் ஆகியோரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன

Monday, May 18, 2009

போட்டு அம்மான் நடேசன் பானு ஆகியோரின் மனைவிமார்கள்; இவர்களின் இறப்பை உறுதிசெய்துள்ளனர்




புpரபாகரனின் வலது கையாகிய பொட்டுஅம்மான் அல்லது பபா அல்லது ஓஸ்கார் அல்லது பு அல்லது சோபிகமூர்த்தி அல்லது கைலான் அல்லது சிவசங்கர் அல்லது சண்முகநாதன் என்று பல பட்டம் பெற்றவர்.மற்றயது பானு பின் அல்லது பிறாவோ அல்லது சிவநாதன் அல்லது சோமசேகரன் போன்ற பட்டப்பெயர்கள் செல்லப்பெயர்களைக்கொண்டவர். இவர்கள் மூவரும் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. போட்டு அம்மான் 1998ம் ஆண்டு தலதா மாளிகைக்கு குண்டுவைத்தமைக்காகவும் 1992 ஒக்டோப்ர் 27ல் சாவகச்சேரி பொலிஸ்ஸ்ரேசனைத்தாக்கியமை 1987-1989 இந்திய அமைதிப்படைக்கு எதிரான தாக்குதல்கள் மட்டக்களப்பில் மற்றும் அம்புஸ் அமைதிப்படைக்கு எதிரான தாக்குதல்கள் உமையாள்புரத்திலும் 1984ல் குரநகரில் பாதுகாப்புபடைகளின் தலைமைப்பீடத்தை தாக்கியமை மற்றும் 1990ல் இபிஸ் காம்பைத்தகாக்கியமை போன்ற குற்றங்களும் மற்றும் பல உள்நாட்டு வெளிநாட்டு குற்றச்செயல்களிலும் சம்பந்தப்பட்டுள்ளார்.மேலும் 1991ல் இந்தியப்பிரதமர் ராஜிவ்காந்தியை கொலைசெய்ததிலும் இவர் கைவண்ணமே .1993 ஓகஸ்ட் 3ம் திகதி மாத்தையாவையும் அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களையும் கைதுசெய்ததும் சிறுகச்சிறுக கொலைசெய்ததும் இவர்தான்.1996 ஜனவரி 31ல் இலங்கை மத்தியவங்கிக்கு குண்டுவைத்ததும் இந்தப்பெருமானார்தான்.அமிர்தலிங்ம் யோகேஸ்வரன் பத்மனாபா போன்றோரை கொலைசெய்து ரத்தம் குடித்தவர் இந்த பொட்டுஅம்மான்.


பிரபாகரன் மகன் சுட்டுக்கொலை படம் இணைப்பு


Sunday, May 17, 2009

அன்னை பூபதி கட்டடத்தை வெடிக்கவைத்து பிரபாகரன் மற்றும் தளபதிகள் தற்கொலை


விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் எந்தத் தடயமும் தமக்கு இதுவரையில் கிடைக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக வெளியான வதந்திகள் எவையும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அது கூறியுள்ளது.

மோதல்களில் கொல்லப்பட்ட இரண்டு விடுதலைப் புலிகள் இயக்க இடைநிலை தலைவர்களின் உடல்களே தமக்குக் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தமது நடவடிக்கைகளின்போது பிரபாகரன் உயிருடனோ அன்றி இறந்த உடலாகவோ கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஏ.எஃப்.பி. செய்திச் சேவைக்கு இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹனுகல்ல தெரிவித்துள்ளார். பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக பரவியிருக்கும் வதந்திகளை இதன்போது அவர் மறுத்துள்ளார்.

"பிரபாகரன் தொடர்பான எந்தத் தகவலும் எம்மிடம் இல்லை'' என்று லக்ஸ்மன் ஹனுகல்ல ஏ.எஃப்.பி.யிடம் தெரிவித்தார்.

தற்கொலை?

வன்னியில் விடுதலைப் புலிகள் வசம் எஞ்சியிருந்த நிலப்பரப்பை இராணுவம் வேகமாகக் கைப்பற்றிவரும் நிலையில், பிரபாகரன் மூத்த தளபதிகளுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்டுவிட்டார் என்ற வதந்திகள் பரவியுள்ளன.புலிகளின் தலைவர்வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் தளபதிகள் பொட்டு அம்மான் உள்ளிட்டோர் இன்று பிற்பகல் 6.45 மணியளவில் 'அன்னை பூபதி" என்ற பெயரிடப்பட்ட கட்டடத்துகள் போயிருந்தவாறு அதனை வெடிக்கவைத்து தற்கொலைசெய்யது கொண்டுள்ளனர்.

வன்னியில் தமது முகாம்களில் ஒன்றில் இருந்தவாறு அதனை குண்டுவைத்து தகர்த்து புலிகளின் தலைவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை அரசியல், இராணுவ விமர்சகர் ஒருவர் நேற்றுத் தகவல் வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற வதந்திகள் வேகமாகப் பரவியுள்ளது.

எனினும், இந்த ஊகங்கள் எதனையும் களத்தில் மோதல்களில் ஈடுபட்டுவரும் படைத்தரப்பினரோ, பாதுகாப்பு அமைச்சோ இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை. விடுதலைப் புலிகள் ஒரு சதுர கிலோ மீற்றருக்கும் குறைவான நிலப்பரப்புக்குள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலை மட்டுமே பாதுகாப்பு அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.

ஆயுதங்களைக் கைவிடத் தயார்?

இதேவேளை, படைத்தரப்பின் முற்றுகை கடுமையாக இறுகியுள்ள நிலையில், மோதல்களில் சிக்குண்டுள்ள பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக தமது ஆயுதங்களை மௌனமாக்கத் தயார் என்று விடுதலைப் புலிகள் புதிய அறிவிப்பு ஒன்றை இன்று விடுத்துள்ளனர். புலிகள் ஆயுதங்களைக் கைவிடத் தயார் என்று அறிவித்திருப்பதாக அனைத்துலக ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்டு வருகின்றன.

"மோதல்கள் ஒரு கசப்பான முடிவுக்கு வருகின்றன'' என்று, விடுதலைப் புலிகளின் சர்வதேச தொடர்பாளர் செ.பத்மநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் புலிகள், சுமார் மூன்று தசாப்தகாலமாக தாம் முன்னெடுத்துவந்த ஆயுதப் போராட்டத்தைக் கைவிடத் தயாராகிவிட்டமை தெளிவாவதாக இந்திய ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான நாராயணசுவாமி அல் ஜசீரா தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.

Tuesday, May 12, 2009

கொஞ்சம் பின்னோக்கிப்போகலாமா? - யாழ்ப்பாண நிலை அன்றும் இன்றும்

இலங்கை அரசாங்கப் படைகளுக்கும்பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்இடையே கடும் சண்டை தொடர்ந்துகொண்டுள்ள ஒரு நிலையில் ஒரு யுத்த நிறுத்தத்தைஏற்படுத்திஇ இரு தரப்பையும் பேச்சுவார்த்தைக்கு இட்டுச் செல்வதற்கான கலந்துரையாடல்கள் புதுடில்லியிலும் கொழும்பிலும் உக்கிரம்கண்டுள்ளன. அமெரிக்காவும் ஐரோப்பியஒன்றியமும் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்தலைமையிலான இந்திய அரசாங்கத்தைஇநெருக்கடியில் நேரடியாகத் தலையிடும்படிநெருக்கி வருகின்றன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு தொடர்ச்சியானவெற்றிகளைத் தொடர்ந்தே இது ஏற்பட்டுள்ளது.


திங்கட்கிழமை நோர்வே பிரதி வெளிநாட்டுஅமைச்சர் றேமண்ட் ஜோன்சன்இ சிறப்புபிரதிநிதி எறிக் சொல் ஹெயிம் ஆகியோரைஉள்ளடக்கிய ஒரு நோர்வே தூதுக்குழுஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடனும்இலங்கை வெளிநாட்டு அமைச்சர் லக்ஷ்மன்கதிர்காமருடனும் எதிர்க்கட்சித் தலைவர்ரணில் விக்கிரமசிங்காவுடனும் இரண்டு நாள்அந்தரங்க பேச்சுவார்த்தைகள் நடாத்தியது.இவர்கள் கொழும்புக்கு வருகை தருவதற்குமுன்னர் சொல்ஹெயிம் வாஷிங்டனுக்குவிஜயம் செய்ததோடு லண்டனில் உள்ளதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களுடன்பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும்நம்பப்படுகின்றது.
பெரும் ஐரோப்பியவல்லரசுகளுக்கு ஆதரவு வழங்கும் நோர்வேஇநீண்டுவரும் உள்நாட்டு யுத்தத்துக்குஒரு பேச்சுவார்த்தை மூலமான தீர்வைக்காணும் இராஜதந்திர நடவடிக்கைகளைபெப்பிரவரியில் ஆரம்பித்து வைத்தது. இதுஆட்டங்கண்டு போன போதிலும் இந்தமோதுதல் இலங்கையில் மட்டுமன்றி இந்தியத்துணைக் கண்டம் பூராவும் ஏற்படுத்தும்தாக்கங்களையிட்டு ஐரோப்பிய தலைநகரங்களில் பெரும் பீதி நிலவுவதால் இப்போதுஇப்பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. மே 15ம் திகதி ஐரோப்பிய ஒன்றியம்வெளியிட்ட ஒரு அறிக்கையில் இரு தரப்பினரையும்"குரோதங்களை களையும்படியும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும்படியும்" வேண்டியது.

சிறப்பாக நோர்வே அரசாங்கத்தின்முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படிதூண்டியது.
சொல்ஹெயிம் கொழும்புபேச்சுவார்த்தைகளின் பின்னர் புதன்கிழமைஇஇந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைநடாத்த புதிடில்லி பயணமானார். இருப்பினும்இந்தப் பேச்சுவார்த்தைகளையிட்டுஎதுவித விபரமும் வெளியிடப்படவில்லை. ஆனால்இன்றைய நிலைமையில் இந்தியா தலையிடவேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்சொல்ஹெயிம் கூறியதாவது: "இந்திய அரசாங்கம்எப்படி எப்போது செயல்பட வேண்டும்என்பது' பற்றி நான் இந்திய அரசாங்கத்துக்குஎப்போதும் ஆலோசனை கூறப்போவதில்லை"எனத் தெரிவித்தார். ஆனால் அவர் மேலும்கூறுகையில் சுட்டிக்காட்டியதாவது:"இந்தியாவின் முக்கியத்துவம் பிரமாண்டமானதுஎன்பதை நான் பெரிதும் ஒப்புக்கொள்கின்றேன்".
அதே நாளன்று அமெரிக்க அரசியல்விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச்செயலாளர் தோமஸ் பிக்கரிங்கும் இந்தியாவில்இருந்து கொண்டிருந்தார். இலங்கையில்இந்தியா முன்னணிப் பாத்திரம் வகிப்பதன்முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.


இந்திய வெளிநாட்டு செயலாளர் லிலித்மன்சிங்குடனும் பாதுகாப்பு அமைச்சர்ஜோர்ஜ் பெர்னான்டஸ¢ உடனும் பேச்சுவார்த்தைகள் நடாத்தியதைத் தொடர்ந்துபிக்கரிங்கும் இந்தியத் தரப்பினரும்இ இன்றுள்ளஸ்ரீலங்கா அரச கட்டுமானத்தினுள் பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வு காணப்பட வேண்டும்என வலியுறுத்தினார். தமிழீழ விடுதலைப் புலிகளின்முக்கிய இலக்கான ஒரு சுதந்திர தமிழ்அரசை அமைப்பதற்கு எதுவித உதவியும்வழங்குவதை இந்தியாவும் அமெரிக்காவும்நிராகரித்தன. அடுத்த திங்கட் கிழமை அரசியல்தலைவர்களுடன் பேச்சுவார்த்தைநடாத்தும் பொருட்டு பிக்கரிங் கொழும்புக்குவருகை தர உள்ளார்.


இலங்கை நெருக்கடிதொடர்பாக அமெரிக்கா கொண்டுள்ளஅக்கறையை வெளிக்காட்டும் வகையில்பாரசீக வளைகுடாவில் இருந்த அமெரிக்ககடற்படை அதிரடிப்படையின் ஒரு பகுதியினர்தெற்கு அராபியக் கடலுக்குஇ அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இன்றைய இந்து பத்திரிகையின்படி:"ஆய்வாளர்களின்படி இந்த யுத்தக் கப்பல்களின்நகர்வானது அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர்திரு. தோமஸ் பிக்கரிங்கின் விஜயத்துடன் இணைந்துகொண்டுள்ளது. இலங்கையில் வளர்ச்சிகண்டுவரும் நிலைமைகளை நெருக்கமாகநோட்டமிடுவதில் அமெரிக்கா ஆர்வம்காட்டுகின்றது. இங்குள்ள வட்டாரங்களின்தகவல்களின்படி தனது கப்பல்களைநெருக்கமாக நகர்த்துவதுஇ அமெரிக்காபிராந்தியத்தில் இந்தியாவின் மேலாதிக்கத்தைசவால் செய்வதாக அமையாது.

மாறாகஇபுதன்கிழமை பிக்கரிங் சுட்டிக் காட்டியதுபோல் அமெரிக்காவும் இந்தியாவும்நோர்வேயும் இலங்கையின் இனப்பிரச்சினையைஒரு பிராந்திய கட்டுமானத்தினுள் தீர்த்துவைப்பதில் ஒரு முன்னணிப் பாத்திரம் வகிப்பதையேவிரும்புகிறது".
தமிழீழ விடுதலைப் புலிகள்யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்துகொண்டுள்ள சுமார் 40இ000 இலங்கைப் படைகள்இன்று சரணடைய வேண்டும் அல்லதுஒரு "இரத்தக் களரிக்கு" முகம் கொடுக்கவேண்டும் என்ற காலக் கெடுவை விதித்ததோடுஇராஜதந்திர நடவடிக்கைகள் ஆவேசம்கண்டுள்ளன. 'புலிகளின் குரல்' (க்ஷிஷீவீநீமீ ஷீயீ ஜிவீரீமீக்ஷீள) வானொலி விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணநகரில் இறுதி தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறியது. இதையிட்டு இலங்கை அரசாங்கம்எந்தவிதமான உத்தியோக பூர்வமானபிரதிபலிப்புக்களைக் காட்டிக் கொள்ளாதபோதிலும் யாழ்ப்பாணத்தை பிடியில் வைத்திருக்க'கடைசி மனிதன் இருக்கும் வரை' இராணுவம்போராடும் என குமாரதுங்கவும் அவரின்அமைச்சர்களும் தெரிவித்ததாக பகிரங்கஅறிக்கைகள் குறிப்பிட்டன.


பொதுஜனமுன்னணி அரசாங்கம் அதனது புதிய அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் கடும் தணிக்கையை அமுல்படுத்திஉள்ளதாலும் எந்தவொரு பத்திரிகையாளரும்யுத்தப் பிராந்தியத்துக்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாலும் யுத்த நிலைமையைமதிப்பீடு செய்வது சங்கடமாகியுள்ளது.ஆனால் அரசாங்கஇ விடுதலைப் புலிகள்வட்டாரங்களின் தகவல்களின்படி யாழ்ப்பாணநகருக்கு கிழக்கே பல இடங்களில் -சாவகச்சேரிஇ செம்மணி உட்பட- கடந்த ஒரு சில தினங்களில்கடும் மோதுதல்கள் இடம்பெற்றுள்ளதுதெளிவாகியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளுக்குஇராணுவத்தின் விரகி முக்கியத்துவம் வாய்ந்தபலாலி விமானத்தளத்தில் இருந்து ஒரு சிலகிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ளஅச்சுவேலியில் இடம்பெற்ற "சுற்றிவளைத்துதேடும்" நடவடிக்கையில் ஐந்து தமிழீழவிடுதலைப் புலிப் போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.


தமிழீழவிடுதலைப் புலிகள் அமைப்பு நாட்டின்கிழக்கு மாகாணத்தில் ஒரு புதிய இராணுவமுன்னரங்கை திறப்பதாகக் தெரிகின்றது.கொழும்பில் இருந்து கிழக்கே 300 கி.மீ. அப்பால்உள்ள மட்டக்களப்பில் இராணுவ முகாமும்விமானத் தளமும் இந்த வாரத் தொடக்கத்தில்பிரிவினைவாதிகளால் தாக்கப்பட்டதைஇலங்கை இராணுவ வட்டாரங்கள் ஊர்ஜிதம்செய்தன. நகரில் உள்ள தரைப்படைதலைமை அலுவலகம் மோட்டார் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ஏப்பிரல் 22ம் திகதி விடுதலைப்புலிகள் ஆனையிறவு இராணுவ முகாமைகைப்பற்றியதோடுஇ யாழ்ப்பாணக்குடாநாட்டைத் தமது கட்டுப்பாட்டுக்குள்கொணரத் தள்ளப்பட்டதில் இருந்துகிழக்கில் யுத்தம் இடம் பெறுவது இதுவேமுதற் தடவையாகும்.


நிஜ இராணுவநிலைமை என்னவாக இருந்தாலும் இந்தியாவிலும்ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஒருதெளிவான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மேலாதிக்கம்செலுத்துவதோடு இலங்கை ஆயுதப்படைகளின் தோல்வி ஒரு கிழமையில் அல்லதுஇன்னும் ஒரு சில நாட்களுக்கு அப்பாற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய பிரதமர்வாஜ்பாய் திங்களும் செவ்வாயும் பாதுகாப்புதொடர்பான விசேட அமைச்சரவைகமிட்டியின் (சிசிஷி) ஒரு தொடர் கூட்டத்துக்குதலைமை தாங்கும் பொருட்டு திட்டமிட்டபடிபோபாலுக்கு விஜயம் செய்வதை இரத்துச்செய்தார்.

ஒரு இந்திய பத்திரிகை செய்தியின்படி:"மூன்று படைத் தளபதிகளும் இலங்கைநிலைமை தொடர்பாக கடைசியாககிடைத்த புலனாய்வு தகவல்களை கமிட்டியிடம்வெளியிட்டனர். ஒரு தகவலின்படி புலனாய்வுஅறிக்கைகள் யாழ்ப்பாணம் இம்மாதக்கடைப்பகுதியளவில் வீழ்ச்சி காணலாம் எனஎச்சரித்துள்ளன. உண்மையில் தமிழ் நாடுகாரைக்கால் பகுதியைச் சேர்ந்தஇந்திய கடற்படையினால் வழங்கப்பட்டஅதிர்ச்சி தரும் அறிக்கைகள் யாழ்ப்பாணத்தின்வீழ்ச்சி 24 மணித்தியாலங்களுள் இடம்பெறலாம்"எனக் குறிப்பிட்டுள்ளது.


முன்னர் இந்தியஅரசாங்கம் இலங்கையில் நேரடி இராணுவத்தலையீட்டை நிராகரித்து இருந்ததோடுமுற்றுகைக்குள்ளாகியுள்ள படைகளையாழ்ப்பாணத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்கு உதவப் போவதில்லை எனவும் சமிக்கைசெய்திருந்தது. இந்த சீ.சீ.எஸ்.(சிசிஷி) கூட்டத்தைத்தொடர்ந்து இந்திய அரசாங்கம் அப்பிராந்தியத்தில் ஒரு யுத்த நிறுத்தம் ஏற்படுமிடத்துஇலங்கைப் படைகளை அப்புறப்படுத்தத்தயாராக உள்ளதாக அறிவித்தது. இந்தியஆயுதப் படைகள் தெற்கு நோக்கி யுத்தக்கப்பல்களையும் கனரக போக்குவரத்துவிமானங்களையும் அத்தோடு 15000 படையாட்களையும் ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளது.இந்தியப் பத்திரிகைகளுக்கு விமானப் படைத்தளபதி விஜே சங்கர் வெளியிட்ட ஒரு அறிக்கையில்:"புதுடில்லியில் இருந்து உத்தரவு வருமிடத்துநாம் அரை மணித்தியாலத்தில் நகர முடியும்"எனக் குறிப்பிடப்பட்டா£¢.


நேற்று'நியூயோக் டைம்ஸ்' பத்திரிகை கிளர்ச்சி படைகள்"ஒரு பெரிதும் உறுதியான போராட்டத்தில்"ஈடுபட்டுக் கொண்டுள்ளதாக இலங்கைஜனாதிபதி குமாரதுங்கவை மேற்கோள்காட்டி கட்டுரை தீட்டியதோடு "படைவிலக்கல்தற்போதைக்கு சாத்தியம் போல்தெரியவில்லை" எனவும் தெரிவித்தது. இந்தப்பத்திரிகை மேலும் குறிப்பிட்டதாவது: "6:1என்ற விகிதத்தில் (அரசாங்கப்) படைகள்கிளர்ச்சிப் படைகளின் எண்ணிக்கையை தாண்டிச்சென்றாலும் அரசாங்கம் திட்டவட்டமற்றமுறையில் தாக்கிப் பிடிக்குமா என்பது சந்தேகத்துக்கு இடமானது என இராணுவ ஆய்வாளர்களும்மேற்கத்தைய இராஜதந்திரிகளும் தெரிவிக்கின்றனர். இலங்கை இராணுவம் ஒரு பெரிதும் அரசியல்மயமாக்கப்பட்ட கட்டளை அமைப்பினாலும்ஒரு மனமுறிவு கண்ட படையாட்களாலும்பறக்கமுடியாத விமானங்களாலும் பலவீனம்கண்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றார்கள்.இராணுவ மூலோபாயத்தில் குறைபாடுகள்இருந்து கொண்டுள்ளதை திருமதி குமாரதுங்கவே ஒத்துக் கொண்டுள்ளார்."


இலங்கைப்படைகளை உடனடியாக அப்புறப்படுத்தும்திட்டத்தை திட்டவட்டமான முறையில் தயாரிப்பதில்இந்தியாவும் நோர்வேயும் சிக்கிக் கொண்டுள்ளன என்பதற்கான அறிகுறி தென்படுகின்றது.செவ்வாய்க் கிழமை வெளியான கல்கத்தா'டெலிகிராப்' பத்திரிகையின் ஒரு கட்டுரைகூறியதாவது: "சந்திரிகா குமாரதுங்கஅரசாங்கம் ஒரு யுத்த நிறுத்தத்துக்குஇணங்கியுள்ளது. யாழ்ப்பாணத்தில் அடைபட்டுப்போய்க் கிடக்கும் சிங்கள படையாட்களைபாதுகாப்பான இடத்துக்கு இட்டுச்செல்ல இந்தியக் கடற்படையினர் செல்வதற்கான நேரம் இதுவே. ...(ஆனால்) தமிழீழ விடுதலைப்புலிகள் சாத்தியம் இல்லாத கோரிக்கைகளைமுன்வைத்துள்ளது. அவர்கள் சும்மாஈழத்தை மட்டும் கோரவில்லை. அவர்கள்தப்பித்து ஓட்டம் பிடிக்கும் இலங்கைப்படைகளினால் விட்டுச் செல்லப்படும்ஆயுதங்களுக்கும் யுத்தத் தளபாடங்களுக்கும்திரும்பத் திரும்ப உரிமை கொண்டாடுகின்றனர்."
இந்திய அரசாங்கம் இலங்கையின் வேண்டுகோளின் பேரில் இராணுவ ரீதியில் தலையிடு செய்யதயக்கம் காட்டுகின்றது. முதலாவதாகஇஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டின் கணிசமானபங்காளிகளான தமிழ் நாடு அரசியல் கட்சிகளின்எதிர்ப்பு விளங்குகின்றது. இரண்டாவதாகஇந்திய- இலங்கை உடன்படிக்கையின் கீழ்1980களின் கடைப்பகுதியில் இலங்கையின் வடபாகத்தில்இந்திய இராணுவத்துக்கு ஏற்பட்ட பேரழிவுமிகுந்த சிக்கல்கள் இருந்து கொண்டுள்ளது.எவ்வாறெனினும் மறுபுறத்தில் தனது சொந்தக்கோடிப்புறத்தில் ஏனைய சக்திகள் தலையிடுவதை இந்திய ஆளும் வர்க்கம் தடுக்க வேண்டியுள்ளது.அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் வெற்றிஇந்தியத் துணைக்கண்டத்தின் வேறு பகுதிகளிலும்-குறிப்பாக ஜம்மு-காஷ்மீர்இ தமிழ் நாடு- பிரிவினைவாதஇயக்கங்களுக்கு ஊக்கமளிக்கும் எனஅஞ்சுகின்றது.


அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாகஇந்திய ஆளும் வட்டாரங்களில் ஒரு உக்கிரமானவிவாதம் இடம் பெற்று வருகின்றது.
'இந்து' பத்திரிகையின் ஒரு ஆசிரியத் தலையங்கம்எந்தவிதமான நேரடி இரணுவத் தலையீட்டையும் எதிர்த்து வாதிட்டுள்ளது: "இலங்கையின்இனக்குழு யுத்தத்துக்கு இந்தியா ஒருநேரடியான இராணுவப் பாத்திரத்தையோஅல்லது ஒரு இராணுவ தீர்வையோ கொண்டிருக்கவில்லை. இனக்குழு யுத்தத்தை தீர்த்துவைப்பதே இந்தியா இலங்கையில் கொண்டுள்ளமுதல் அக்கறையாகும். தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆக்கிரமிப்புக்கு முகம் கொடுக்கவும்ஜனாதிபதி திருமதி. சந்திரிகா குமாரதுங்கஅமுல் செய்யத் திடசங்கற்பம் பூண்டுள்ளஅரசியல் அதிகாரப் பரவலாக்கத்துக்குதார்மீக ரீதியான அரசியல் ஆதரவை வழங்குவதுமே இந்தியா செய்யக்கூடிய சிறந்த உதவியாகும்."
ஆனால் "இந்தியா இலங்கையில் தலையிடவேண்டும்" என்ற தலைப்பில் 'டெக்கான்குரோனிக்கல்' (ஞிமீநீநீணீஸீ சிலீக்ஷீஷீஸீவீநீறீமீ) கடந்தவாரம்எழுதிய கட்டுரையில் "தேசிய உடன்பாடு"எனக் குறிக்கப்படுவதை சவால் செய்தது."இந்தப் பிராந்தியத்தில் ஒரு நீண்ட காலசமாதானத்தை ஸ்தாபிதம் செய்ய அவசியப்படுமிடத்து காலடி வைப்பதற்கான காலம்அங்கு இருக்குமானால் அது இதுதான்.தமிழீழ விடுதலைப் புலிகளின் சமீபகால வெற்றிகளும்இலங்கை அரசாங்கத்தின் உதவிக்கானவேண்டுகோளும் இந்த அமைப்பின் அதிகரித்துவரும் செல்வாக்கை கட்டுப்படுத்திஇஸ்தம்பிக்கச் செய்வதற்கும் அதேசமயம்ஒரு நண்பனதும் அயலவரதும் பிராந்தியஒருமைப்பாட்டைக் காக்கவும் இந்தியாவுக்குஒரு நல்ல சாட்டாகியுள்ளது".


'இந்து'பத்திரிகைக்கு குமாரதுங்க இந்த வாரம்வழங்கிய ஒரு பேட்டியில் இந்தியா இராணுவஉதவியை வழங்கத் தவறியதையிட்டு ஏமாற்றம்அடைந்துள்ளதாக தெரிவித்தார். "எம்மால்தேர்ந்தெடுக்கப்பட்ட அனுசரணையாளரான நோர்வேயின் கரங்களைப் பலப்படுத்துவதன்மூலம்" இந்தியா இலங்கையிலான சமாதானநடவடிக்கைகளுக்கு இனியும் பங்களிப்புச்செய்ய முடியும் எனவும் மேலும் தெரிவித்தார்.நோர்வேயுடன் சேர்ந்து "பல நாடுகளை"உள்ளடக்கிய ஒரு கூட்டு இராஜதந்திரமுயற்சிகளில் இந்தியாவைச் சேர்த்துக்கொள்ளும் சாத்தியங்களையிட்டு தனதுஅரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும்அவர் குறிப்பிட்டார்.
பிக்கரிங்கின் விஜயத்தின்ஒரு நோக்கம் இலங்கையில் ஒரு பெரிதும்ஊக்கமான பாத்திரத்தை வகிக்கும்படிஇந்திய அரசாங்கத்தை தள்ளுவதேயாகும்.'த டைம்ஸ் ஒப் இந்தியா' பத்திரிகை இதையிட்டுகருத்து தெரிவிக்கையில்: புதுடில்லியில் உள்ளஇந்த அதிகாரிகள் (பிக்கரிங் விஜயம்) இந்தியாவேகமாக நடைபோடச் செய்யும்ஒரு வழியாகக் காண்கின்றார்கள். 'இந்தியாதொடர்ந்து சம்பந்தப்படாது இருக்கமுனைகிறது; பேச்சுவார்த்தைகளையிட்டுகிடுநடுங்குகின்றது என்ற உணர்வு- அல்லதுஏதோ ஒரு வகையிலான சம்பந்தம்-அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தைபதட்டம் காண வைத்துள்ளது' என ஒருஅதிகாரி தெரிவித்தார். பிக்கரிங் விஜயமானதுஇந்திய மத்தியஸ்தத்தின் முழுப் போக்கினையும்துரிதப்படுத்தும் என ஊகிக்கப்படுகின்றது".


ஜனாதிபதி பில் கிளின்டனின் சமீபத்திய இந்திய துணைக்கண்ட விஜயம் அமெரிக்காவின் நலன்களைப் பாதுகாக்கவும் அதன் பேரிலான பிராந்திய பொலிஸ்காரனாக செயற்படவும் இந்து சோவினிச பாரதீயஜனதா கட்சி (ஙியிறி) தலைமையிலான இந்தியஅரசாங்கத்தின் மீது பெரிதும் நம்பிக்கைவைக்கத் தயாராகி வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஒரு வருடமாகஅமெரிக்கஇ இந்தியஇ இராணுவஇ புலனாய்வுஅதிகாரிகள் "பயங்கரவாதம்" தொடர்பாகபல கூட்டங்களை- குறிப்பாக காஷ்மீர்இஆப்கானிஸ்தான் சம்பந்தமாக- நடாத்தியுள்ளனர்.
நேற்று 'டைம்ஸ் ஒப் இந்தியா' வில் வெளியானஒரு கட்டுரை புதுடில்லி மீதான நெருக்குவாரங்களைத் தொகுத்துக் கூறியது. "வாஷிங்கடனில்உள்ள கொள்கைத் திட்டமிடலாளர்களின்உள்ளங்களில் இலங்கை ஒரு கீழ்மட்ட முன்னுரிமைஇடத்தையே வகிக்கிறது. "உலக ஒழுங்கு"முறையைக் காட்டிலும் தீவில் தமக்கு எதுவிதமானநிஜ அக்கறையும் கிடையாது என்பதைமுன்னொருபோதும் இல்லாத விதத்தில்இன்று நம்புகின்றனர். அதுவே யுத்தத்துக்குமுடிவுகட்டும்படி அக்கறை கொள்ளச்செய்துள்ளது. ஆனால் இலங்கை இராணுவம்யாழ்ப்பாணத்தில் தோல்வி காணுமானால்இயாரோ ஒருவர் இதையிட்டு ஏதோஒன்றைச் செய்ய வேண்டி நேரிடும். இந்த"யாரோ ஒருவர்" இந்தியாவே என்பதில்இணக்கம் காணப்படுவதாக தெரிகிறது.புவியியல் வரலாற்றுஇ சேவை வசதிகள்அது தெளிவான முறையில் ஆற்றத் தயங்கும்ஒரு பாத்திரத்தை வகிக்க வேண்டுமானால்-ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில்ஒரு நிரந்தர ஆசனத்துக்கு ஆவல் கொண்டிருக்குமானால் குறைந்த பட்சம் அதனதுபிராந்திய சுமைகளுக்கு தோள் கொடுக்கவேண்டும் என அமெரிக்கஇ ஐரோப்பியகொள்கைத் திட்டமிடலாளர்கள் வலியுறுத்துகின்றனர்."


தற்போதைக்கு இந்தியா 'மத்தியஸ்தர்'பாத்திரத்தை வகிக்கவும் யாழ்ப்பாணத்தில்இருந்து இலங்கை படையாட்களை அப்புறபடுத்தவும் உதவவும் போவதை பகிரங்ககலந்துரையாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன.எவ்வாறெனினும் யாழ்ப்பாண இராணுவநிலைமையில் அல்லது கொழும்பு அரசியல்நெருக்கடியிலான துரித மாற்றங்கள்இவல்லரசுகள் தீவில் முதலாளித்துவ ஆட்சியைக்கட்டிக் காக்கும் பொருட்டு இந்தியாவைஇராணுவ ரீதியில் தலையிடும்படி கோருவதைக்காணக்கூடியதாக இருக்கும்.