Wednesday, May 27, 2009

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வெற்றிபெறும்: சமரசிங்க நம்பிக்கை


ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வெற்றிபெறும்: சமரசிங்க நம்பிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாகக் கூட்டப்பட்டிருக்கும் விசேட அமர்வில் இலங்கைக்குப் போதியளவு ஆதரவு இருப்பதாகவும், இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பிழையானவை என்பது நிரூபிக்கப்பட்டுவருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
“எம்மீது விசாரணை நடத்தப்படவேண்டிய தேவை இல்லை. பல்வேறு தரப்பினரால் அரசியல் அறிக்கைகள் பல வெளியிடப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு நாம் உணர்ச்சிவசப்படத் தேவையில்லையென நான் கருதுகிறேன்” என அமைச்சர் ஜெனீவாவிலிருந்து ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்திருக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவர் நவநீதம்பிள்ளை கூறியிருந்தார்.
எனினும், இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் தேவையென மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் கூறவில்லையென அமைச்சர் சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
“எமக்கு எதிராகப் போர் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு வீசா வழங்கவில்லையென்ற கேள்விகள் எதுவும் எழாது. ஏனெனில், உள்ளூர் விவகாரங்களை அரசாங்கம் சட்டரீதியாகக் கையாழும்” என்றார் அமைச்சர்.

மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருப்பதுடன், அதற்குப் பதிலளிக்கும் வகையில் இலங்கை அரசாங்கமும் பதிலறிக்கையொன்றை முன்வைத்துள்ளது.
இலங்கைக்கு எதிரான அறிக்கைக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் உறுப்பு நாடுகள் மத்தியில் மாற்றுக் கருத்துக்கள் காணப்படுவதாகத் தெரியவருகிறது. சீனா, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, மலேசியா, பஹ்ரெய்ன், பிலிப்பைன்ஸ், கியூபா, சவுதி அரேபியா, எகிப்து, நிக்கரகோவா, பொலிவியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதுடன், இலங்கைக்கு முன்னர் ஆதரவு வழங்கிய ஈராக் தனது நிலைப்பாட்டை மாற்றியதுடன், இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தது.

ஏ-9 வீதியைத் திறக்க இராணுவத்தின் அனுமதி இல்லை: அமைச்சர்

யாழ்ப்பாணத்துக்கும் கண்டிக்கும் இடையிலான ஏ-9 வீதியைத் திறப்பதற்கு இராணுவத்தினரிடமிருந்து இன்னமும் அனுமதி கிடைக்கவில்லையென பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் டபிள்யூ.பீ.எக்கநாயக்க கூறினார்.

ஏ-9 வீதியின் புனரமைப்பு நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளபோதும் அதனைத் திறப்பதற்கான திகதி தொடர்பில் இராணுவத்தரப்பில் எந்தவிதமான இணக்கப்பாடும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லையென அவர் குறிப்பிட்டார்.எனினும், யாழ் குடாநாட்டுக்கான பொருள்களை ஏற்றிச்செல்லும் லொறிகள் ஏ-9 வீதியூடாகச் செல்ல அனுமதிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அமைச்சர் தெரிவித்தார்.“இவ்வாறு அனுப்பப்படும் லொறிகள் அநுராதபுரத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அடைக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணத்தில் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படும்” என எக்கநாயக்க கூறினார்.அதேநேரம் 86 கிலோ மீற்றர் நீளம்கொண்ட ஏ-32 வீதியின் 12 கிலோ மீற்றர் தூரம் புனரமைக்கப்பட்டுவிட்டதாகத் தமக்கு அறிக்கை சமர்;ப்பிக்கப்பட்டிருப்பதாகவும், அந்தப் பாதையைத் திறப்பதாயின் முழுமையான அறிக்கை கிடைக்கப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tuesday, May 26, 2009

பிரபாகரன் கொலைக்கு பத்மநாதனே காரணம்: கருணா அம்மான்


விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் கே.பி. என அழைக்கப்படும் பத்மநாதன் சதி செய்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைக் கொலைசெய்திருப்பதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைக் காப்பாற்றுவதாக இறுதிவரை உறுதிமொழி வழங்கிய கே.பி. இறுதி நேரத்தில் அந்த உறுதிமொழியைக் காப்பாற்றவில்லையென அமைச்சர் கூறினார்.

“வேண்டுமென்றே கே.பி. அவ்வாறு செய்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் நிதிப் பிரிவின் கட்டுப்பாடு கே.பி.யின் கீழேயே இருந்தது. இறுதி மோதலில் பிரபாகரன் கொல்லப்படவேண்டுமென விரும்பிய கே.பி., அவ்வாறு பிரபாகரன் கொல்லப்பட்டாலே தான் அடுத்த தலைவராகமுடியும் நினைத்திருந்தார்.” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாடுகளில் கே.பி. முன்னெடுத்த பிரசாரங்களாலேயே புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களிடமிருந்து பெருமளவு நிதி புலிகள் அமைப்புக்கு வழங்கப்பட்டதாக கருணா அம்மான் குற்றஞ்சாட்டினார்.

“விடுதலைப் புலிகள் அமைப்புக்குப் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் எந்த உதவியும் செய்யக்கூடாதென நான் வேண்டுகோள்விடுக்கிறேன். அந்த அமைப்பு தற்பொழுது இல்லை. தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகத் தம்மை இணைத்துக்கொள்ளவேண்டும்” என்றார் அவர்.

அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளும் குமரன் பத்மநாதனும் இணைந்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைக் காப்பாற்றுவதாகக் கூறி சதிசெய்து அவரைக் கொலைசெய்திருப்பதாகத் தமிழ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

கிழக்கிலுள்ள புலிகள் சரணடைய நடவடிக்கை

இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் காட்டுப் பகுதிகளில் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகள் அரசாங்கத்திடம் சரணடைவதற்குத் தனது உதவியை நாடியிருப்பதாகவும் அமைச்சர் முரளீதரன் கூறியுள்ளார்.

கிழக்கில் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தன்னைத் தொடர்புகொண்டு அரசாங்கப் படைகளிடம் சரணடைவதற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

“அனைத்துத் தலைவர்களும் சரணடையவுள்ளனர். ராம் என அறியப்பட்டவரைத் தவிர ஏனையவர்கள் சரணடையத் தயாரெனக் கூறி கடந்த ஒரு வாரமாக என்னைத் தொடர்புகொண்டுவருகின்றனர். இந்த விடயத்தை நான் பாதுகாப்பு அமைச்சுக்குத் தெரியப்படுத்தினேன். அவர்கள் உடனடியாகச் சரணடைந்தால் அவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்க நாம் தயார்” எனக் கருணா அம்மான் கூறினார்.

Sunday, May 24, 2009

வன்னியில் நடந்தது என்ன?: நடந்தவற்றை விபரிக்கும் மக்கள்



இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கப் படைகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு வலயத்தில் தாம் எதிர்கொண்ட துன்பங்களை மக்கள் தற்பொழுது வெளியிட ஆரம்பித்துள்ளனர். இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலுள்ள மக்கள் மூலம் கிடைத்த தகவல்களை கார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு வலயத்திலிருந்து இடம்பெயரும்போது விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூடுகள் மற்றும் பாதுகாப்பு வலயப் பகுதி மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்கள், மருத்துவமனைகள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் போன்ற தாம் அனுபவித்த துன்பங்களை நலன்புரி நிலையங்களிலுள்ள மக்கள் சிலர் விபரித்ததாக கார்டியன் குறிப்பிட்டுள்ளது.
இறுதி மூன்று மாதமாக வன்னிப் பரப்பில் நடந்த யுத்தத்தினால் 2,000 சிறுவர்கள் உள்ளடங்கலாக 15,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாக சுகாதார அதிகாரியான சிவா என்பவர் தெரிவித்துள்ளார். தான், தனது மனைவி, ஒரு வயது மற்றும் மூன்று வயதுப் பிள்ளைகள் அனைவரும் ஆட்லறித் தாக்குதல்களிலிருந்து தப்புவதற்காக கடந்த ஒன்பது மாதங்களில் 13 தடவைகள் இடம்பெயர்ந்ததாக அவர் கூறினார்.
புதுமாத்தளன் பகுதியில் கடந்த மூன்று மாதங்கள் தாம் பதுங்கு குழிகளுக்குள்ளேயே வாழ்க்கை நடத்தியதாகக் குறிப்பிட்ட அவர், இந்தப் பதுங்கு குழிகள் ஒவ்வொன்றும் 15 முதல் 20 பேர் பதுங்கியிருக்க கூடியவை எனக் குறிப்பிட்டார். மீண்டும் அவர்கள் இடம்பெயரவேண்டி ஏற்பட்டதால் சில நாட்கள் மாத்திரமே பதுங்கு குழிகளுக்குள்ளும் இருக்க முடிந்ததாக அவர் கூறினார்.
பெப்ரவரி மாதம் சுகவீனமுற்ற மக்களை கடல் வழியாக சிகிச்சைக்காக அனுப்பிவைத்ததாகவும், அதன் பின்னர் அவரைத் தான் காணவில்லையெனவும் சிவா கூறியுள்ளார்.
புதுமாத்தளன் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இயங்கிவந்த தற்காலிக வைத்தியசாலை மீது பல்குழல் பீரங்கி, பொஸ்பரஷ் குண்டுகள், ரொக்கட் குண்டுகள் மூலம் மூன்று தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த சுகாதார அதிகாரி விபரித்தார்.
“இரசாயனக் குண்டுகளால் பாதிக்கப்பட்ட சிலரை நான் கண்டேன். அவர்களின் தோல்கள் எரிந்துவிட்டன. அவை பொஸ்பரஸ் குண்டுகள் என்பது உறுதி” என்றார் அவர்.
விடுதலைப் புலிகளே பொஸ்பரஸ் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதாக இலங்கை இராணுவம் புகைப்படங்களுடன் செய்திகளை வெளியிட்டிருந்தது. எனினும், விடுதலைப் புலிகள் தரப்பு இதனை மறுத்திருந்தது. ஊடகவியலாளர்கள் இங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால் தகவல்களை சுயாதீனமாக உறுதிப்படுத்தமுடியவில்லை. இருதரப்புக்களுமே இவ்வாறான சம்பவங்கள் குறித்து ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டியுள்ளன.
யுத்தம் முடிவடைந்துவிட்டதாகவும், பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ள நிலையில் முகாம்களிலுள்ள மக்கள் இந்தத் தகவல்களை வெளிப்படுத்தியதாக கார்டியன் குறிப்பிடுகிறது. கார்டியனுக்குத் தெரிந்த மூன்றாம் தரப்பு ஒன்றின் மூலமாக இந்தத் தகவல்கள் பெறப்பட்டதாகவும், பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பெயர்கள் மாற்றப்பட்டிருப்பதாகவும் அது குறிப்பிடுகிறது.
ஒழுங்கான வைத்தியசாலை இல்லை
காயப்பட்டவர்களுக்கும், நோயுற்றவர்களுக்கும் சிகிச்சையளிப்பதற்கு புதுமாத்தளன் பகுதியில் ஒழுங்கான வைத்தியசாலையொன்று இருக்கவில்லையென சுகாதார அதிகாரியான சிவா என்பவர் கூறினார்.
“ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் கடுமையான மழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெரும்பாலான நோயாளர்கள் நிலங்களிலேயே படுத்திருந்தனர். உடனடியாக எழும்புவதற்கு அவர்களிடம் திராணி இருக்கவில்லை. அன்றிரவு நீரில்மூழ்கி 10 பேர் உயிரிழந்தனர்” என்றார் அவர்.
இராணுவத்தினர் முன்னேறி வரும் நிலையில், தமது கட்டுப்பாட்டிலுள்ள பதுங்கு குழிகளுக்குச் செல்லுமாறு எவ்வாறு விடுதலைப் புலிகள் பொதுமக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்பதையும் சிவா விபரித்தார்.
“ஏப்ரல் 24ஆம் திகதி இராணுவத்தினர் பாதுகாப்பு வலயத்தை உடைத்துக்கொண்டு உள்நுழைந்துவிட்டார்கள். அவர்கள் பதுங்கு குழிகளின் விழிம்புகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திக்கொண்டு, யார் உள்ளே இருக்கிறார்கள் என அதற்குள்ளிருந்த எம்மிடம் கேட்டனர். பொதுமக்களே உள்ளோம் என்று நாம் கத்தினோம். பின்னர் அவர்கள் எமக்கு வழித்துணை வழங்கி அழைத்துச் சென்றனர்” என்றார் சிவா.
இராணுவத்தினரால் தாம் அழைத்துச்செல்லப்பட்டபோது விடுதலைப் புலிகள் தம்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகத் தமக்கு ஏற்பட்ட அச்சம் மிகுந்த அனுபவத்தை அவர் விபரித்தார்.
இரணைப்பாலைக்குளம் பகுதியிலேயே இராணுவத்தினரின் முதலாவது சோதனைச் சாவடி இருந்ததாகவும், அங்கு தமது ஆடைகள் அனைத்தையும் களையுமாறு கோரி சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பின்னர், தாம் அங்கிருந்து ஓமந்தைச் சோதனைச் சாவடிக்கு அழைத்துவரப்பட்டதுடன், விடுதலைப் புலிகள் என அடையாளம் காணப்பட்டவர்கள் வேறாக்கப்பட்டதாகவும் கூறினார்.
இராணுவத்தினர் தம்மை மரியாதையுடனும், கௌரவமாகவும் நடத்தியதாகக் கூறும் சிவா, தமக்கு உணவு மற்றும் நீர் போன்றவற்றை வழங்கியதாகத் தெரிவித்தார். “இதனை நாம் எதிர்பார்க்கவில்லை” என்றார் அவர்.
இதேவேளை, ஐந்து பிள்ளைகள் மற்றும் நான்கு பேரப்பிள்ளைகளுடன் நெஞ்சளவு நீருள்ள பகுதியைக் கடந்து, ஏப்ரல் 25ஆம் திகதி வவுனியா மெனிக் பார்ம் முகாமுக்கு வந்ததாக 58 வயது யுவதியொருவர் கூறினார்.
“அது மிகவும் பயங்கரமானது என்பதுடன் மிகவும் கடினமானது. ஆனாலும், எனது பேரப்பிள்ளைகளுக்காக நான் அதனைச் செய்தேன். அவர்கள் பாதுகாக்கப்படவேண்டும் என நான் விரும்பினேன்” என்றார் அவர்.
“எனது ஐந்து பிள்ளைகளையும், நான்கு பேரப்பிள்ளைகளையுமே என்னால் காப்பாற்ற முடிந்தது. ஏனைய மூன்று பிள்ளைகளுக்கும் மேலும் மூன்று பேரப்பிள்ளைகளுக்கும் என்ன நடந்தது என எனக்குத் தெரியாது. ஷெல் தாக்குதல்களின் போது நாங்கள் பிரிந்துவிட்டோம். எப்போது நான் அவர்களைச் சந்திப்பேனோ தெரியாது” என அந்த யுவதி கண்ணீருடன் கூறினார்.
நலன்புரி நிலையங்களின் நிலைமை
இடம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாம்களின் நிலைமை தொடர்பாக விளக்கிய கோதை என்பவர், பணம் உள்ளவர்கள் மாத்திரமே நீரைப் பெற்றுக்கொள்ளமுடிவதாகக் கூறினார். தனது ஒரு பிள்ளை தற்காலிக கூடாரத்துக்கு வெளியே தரை விரிப்பொன்றின் மீது தூங்கிக்கொண்டிருப்பதாகவும், தனது பிள்ளை கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சல் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
முகாம்களில் காணப்படும் சுகாதாரமற்ற சூழ்நிலையாலேயே தனது பிள்ளைக்கு நோய் ஏற்பட்டதாக அந்தத் தாய் கவலையுடன் தெரிவித்தார்.
“நிலைமை மிகவும் இக்கட்டாகவே உள்ளது. எனது பிள்ளைகள் உணவு மற்றும் தண்ணீரும் தருமாறு கெஞ்சுகிறார்கள். அதனைப் பார்க்கும்போது மரணவேதனை ஏற்படுகிறது. நாம் வித்தியாசமான வாழ்க்கை வாழ்ந்தவர்கள். எமக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை” என அந்தத் தாய் கவலையுடன் கேள்வியெழுப்பினார்.

நன்றி inlanka

Wednesday, May 20, 2009

சுசையின் உடல் நந்திக்கடலில் கண்டுபிடிப்பு







சூசை மற்றும் வெற்றி றாம்குமார் மணிமேகலா அண்ணாத்துரை ரங்கன் வினோதன் ஆகியோரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன

Monday, May 18, 2009

போட்டு அம்மான் நடேசன் பானு ஆகியோரின் மனைவிமார்கள்; இவர்களின் இறப்பை உறுதிசெய்துள்ளனர்




புpரபாகரனின் வலது கையாகிய பொட்டுஅம்மான் அல்லது பபா அல்லது ஓஸ்கார் அல்லது பு அல்லது சோபிகமூர்த்தி அல்லது கைலான் அல்லது சிவசங்கர் அல்லது சண்முகநாதன் என்று பல பட்டம் பெற்றவர்.மற்றயது பானு பின் அல்லது பிறாவோ அல்லது சிவநாதன் அல்லது சோமசேகரன் போன்ற பட்டப்பெயர்கள் செல்லப்பெயர்களைக்கொண்டவர். இவர்கள் மூவரும் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. போட்டு அம்மான் 1998ம் ஆண்டு தலதா மாளிகைக்கு குண்டுவைத்தமைக்காகவும் 1992 ஒக்டோப்ர் 27ல் சாவகச்சேரி பொலிஸ்ஸ்ரேசனைத்தாக்கியமை 1987-1989 இந்திய அமைதிப்படைக்கு எதிரான தாக்குதல்கள் மட்டக்களப்பில் மற்றும் அம்புஸ் அமைதிப்படைக்கு எதிரான தாக்குதல்கள் உமையாள்புரத்திலும் 1984ல் குரநகரில் பாதுகாப்புபடைகளின் தலைமைப்பீடத்தை தாக்கியமை மற்றும் 1990ல் இபிஸ் காம்பைத்தகாக்கியமை போன்ற குற்றங்களும் மற்றும் பல உள்நாட்டு வெளிநாட்டு குற்றச்செயல்களிலும் சம்பந்தப்பட்டுள்ளார்.மேலும் 1991ல் இந்தியப்பிரதமர் ராஜிவ்காந்தியை கொலைசெய்ததிலும் இவர் கைவண்ணமே .1993 ஓகஸ்ட் 3ம் திகதி மாத்தையாவையும் அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களையும் கைதுசெய்ததும் சிறுகச்சிறுக கொலைசெய்ததும் இவர்தான்.1996 ஜனவரி 31ல் இலங்கை மத்தியவங்கிக்கு குண்டுவைத்ததும் இந்தப்பெருமானார்தான்.அமிர்தலிங்ம் யோகேஸ்வரன் பத்மனாபா போன்றோரை கொலைசெய்து ரத்தம் குடித்தவர் இந்த பொட்டுஅம்மான்.