Saturday, January 31, 2009

வன்னிச் சிவிலியன்கள் கொல்லப்படுவது எதனால்...

கட்டுரையை எழுதும்போது படையினர் விசுவமடுச்சந்தியையும் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன எனவே விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் யாவும் மிகக்குறுகிய பிரதேசத்தினுள்ளே முடக்கப்பட்டு விட்டன. இனியும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் என்ற வாதங்கள் யாவும் கருத்தாய்வுகளுக்க பொருத்தமற்றவையாக அமைந்தவிடும். எனவே இப்பொழுது இலங்கை இராணுவத்தினரால் விடுதலைப்புலிகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர் என்ற விடையமே பொருத்தமானது.இரண்டாயிரத்து அறுநூறு சதுரகிலோமீட்டர் பரப்பளவை கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தின் மக்கள் தொகையினர் ஒருலட்சத்து முப்பதினாயிரம் பேராகும், இரண்டாயிரம் சதுரகிலோமீட்டர் பரப்பளவில் வசித்து வந்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் தொகையினர் சுமார் ஒருலட்சத்து இருபதினாயிரம் பேராவர், மன்னார் மாவட்டத்தின் அரைவாசியில் அறுநூறு கிலோமீட்டர் சுற்றளவில் வசித்து வந்த மக்கள் தொகையினர் கிட்டத்தட்ட ஐம்பதினாயிரம் பேர் என மொத்தமாக மூன்று லட்சத்துக்கு மேலான மக்கள் பாதுகாப்புத் தேடி ஓடியோடி கடைசியில் வந்து ஒளிந்து கொண்ட இடம் வெறும் 333 கிலோமீட்டர்களேயாகும். இதனைத்தாண்டி அவர்கள் வேறு எங்கும் செல்லமுடியாது. இவ்வாறு அவர்கள் கடைசியாக வந்து தங்கியிக்கும் பிரதேசத்தைதான் நீங்கள் முக்கோண வடிவில் மேலுள்ள படத்தில் காண்கின்றீர்கள் இம்முக்கோணத்தின் ஒருபக்கம் கடலால் சூழ்ந்திருக்க அதன் மறு இருபக்கங்களும் இலங்கை இராணவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கின்றது. இதுதான் இன்றைய உண்மையான களநிலவரம். இது எத்தனைபேருக்கு தெரியும் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம் அதனால்தான் சற்று வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. இதை நம்ப மறுப்பபவர்கள் நம்மில் ஏராளம். எனினும் நம்புபவர்கள் நம்புங்கடாடோய்!! இன்டெர்நெட் பாவனையாளர்கள் கூகிள்ஏர்த் மூலம் ஏ35 பாதையை நோக்கி இப்பிரதேசங்களை பார்வையிட்டால் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்களில் அவர்கள் எவ்வாறான பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என்பது பற்றிய உண்மையை தெளிவாக உணர முடியும்.
இதையேன் நான் இங்கே குறிப்பிடுகின்றேன் என்றால் தலைவர் இனித்தான் உள்ளே விட்டு அடிப்பார் என்று எதிர்பார்ப்பவர்களுக்கான சில விளக்கங்களை கொடுப்பதற்காகவே இவ்விபரங்களை அறியத்தருகின்றேன். (உள்ளே விட்டு அடிப்பதாக சொல்லி கடைசியில் தண்ணியை வெளியே விட்டதுதான் மிச்சம். நான் கல்மடு குளத்துதண்ணியை குறிப்பிட்டேனப்பா!) ஏ35 பாதையின் இருமருங்கிலும் இருந்து நீண்ட தூரத்திற்கு மிகப்பெரிய வயல் வெளிகளையும் ஆங்காங்கே சிறுசிறு காடுகள் மற்றும் குடியிருப்புக்கள் தவிர்ந்த வேறு எதனையும் அங்கு காண முடியாது. விடுதலைப்புலிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான புவியியல் வளங்களோ அன்றி அவர்களது பாதுகாப்புக்கு ஏதுவான இதரகாரணிகளோ எதுவும் இப்பிரதேசத்தினுள் இல்லை. எனவே அவர்களது பாதுகாப்பு என்பது இப்பொழு நான் ஏற்கனவே கூறியுள்ள அந்த மூன்று லட்சம் மக்களிலேயே தங்கியுள்ளது என்பதனை நன்கு புரிந்து கொள்ள முடியும்.
இலங்கை இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் பிரதேசத்தினுள் தங்கியிருக்கும் மக்கள் மீதான அரச படையினரின் எறிகணைத் தாக்குதல்களில் இதுவரையில் 300 க்கும் அதிகமான சிவிலியன்கள் இறந்துபோயுள்ளனர். இங்குள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படாது தொடர்ந்தும் இப்பகுதிக்குள் தொடர்ந்தும் யுத்தம் இடம்பெறுமானால் இழப்புக்கள் இன்னும் பல ஆயிரங்களைத் தாண்டும் என்பதில் சந்தேகம் கொள்ளதேவையில்லை. விடுதலைப்புலிகள் எந்த திசையில் இருந்து தாக்குதல்களை மேற்கொள்கின்றார்களோ அதே திசையை நோக்கியே அரசபடையினரும் தமது எறிகணைகுண்டுவீச்சுக்களை நடாத்துகின்றார்கள் இவ்வாறான எறிகணை வீச்சுக்களாலேயே சாதாரண சிவிலியன்கள் கொல்லப்படுகின்றனர். விடுதலைப்புலிகள் சிவிலியன்களின் மத்தியில் நின்று கொண்டு இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள்ளாதிருப்பர்களானால் சாதாரண சிவிலியன்களின் இழப்புக்களை தவிர்க்கமுடியும்;.
எனவே இந்த அடிப்படையில் சர்வதேசங்களின் பொதுவான பார்வை விடுதலைப்புலிகள் மீதே பாய்கின்றது. மக்களை பாதுகாப்பான இடங்களைநோக்கி வெளியேற விடுதலைப்புலிகள் அனுமதிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புக்கள் விடுத்த அறிக்கைகள் எதனையும் விடுதலைப்புலிகள் உள்வாங்கியதாக தெரியவில்லை. எனவே மக்களுக்கு பாதிப்பில்லாமல் யுத்தம் இடம் பெறவேண்டுமானால் கண்டிப்பாக அதற்கு விடுதலைப்புலிகள்தான் கருணை காட்ட வேண்டும். தமது சொந்த மக்கள் மீது விடுதலைப்புலிகள் கருணை காட்டி அவர்களை வெளியேற விடாத வரையிலும் விடுதலைப்புலிகள் மீதான தாட்சண்யத்தையும் எந்த சர்வதேசநாடுகளும் முன்னெடுக்க முன்வராது. வன்னி மக்களை இலங்கை இராணுவத்தினர் கொன்று குவிக்கின்றார்கள் என்ற உண்மையை எந்த தமிழின உணர்வாளனும் மறுக்கமுடியாது. ஆனால் அவ்வாறு மக்கள் இறப்பதற்கு காரணம் விடுதலைப்புலிகள் தான் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் அனைவரும் புலம் பெயர் வாழ் புலி விசுவாசிகள்தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
எனவே வன்னி மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் அதற்கு மிகச் சாதரணமான ஒரே ஒரு வழி அதாவது மக்களை வெளியேற புலிகள் அனுமதிக்கவேண்டும் அவ்வாறு அனுமதிக்காத பட்சத்தில் அவர்கள் மீதான அழுத்தங்கள்; பிரயோகிக்கப்படவேண்டும். அதை விட்டு விட்டு என்னுடைய வீட்டு யன்னல் வழியாக சும்மா போன ஆமிக்கு குண்டை எறிந்தால் ஆமிவந்து அப்பாவுக்குத்தான் அடிப்பான் என்று என்னுடைய 3 வயது குழந்தைக்கே புரிகின்றவிடையம் அதற்காக அமிஅடிக்கின்றான் அடிக்கின்றான் என்றா கத்தமுடியும். நாதாரிப்பயல் எவன் என்ரை வீட்டுக்குள் நின்று குண்டை எறிந்தானோ அவனைத்தான் திட்டமுடியும்.

No comments:

Post a Comment